படப்பிடிப்பில் அடிபட்ட நடிகை சிருஷ்டி டாங்கே!

படப்பிடிப்பில் அடிபட்ட நடிகை சிருஷ்டி டாங்கே!

செய்திகள் 30-Mar-2015 11:12 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னமோ நடக்குது’ படத்தைத் தொடர்ந்து விஜய் வசந்த் நடிக்கும் ‘அச்சமின்றி’ படத்தில், அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ‘டிரிபிள் வி ரிக்கார்ட்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தை ராஜபாண்டி இயக்குகிறார். சமுத்திரக்கனி, கருணாஸ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் ராஜபாண்டி பேசும்போது, ‘‘மீனம்பாக்கம் பின்னி மில்லில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பரத்ரெட்டி, சேரன்ராஜ், ஜெயகுமார், ஆகிய மூன்று வில்லன்களின் அடியாட்களுடன் மோதி விஜய்வசந்தும், சிருஷ்டிடாங்கேவும் தப்பிப்பது போன்று ஸ்டன்ட் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. ஸ்டன்ட்டின் போது எந்தவித பாதுகாப்பு உபரணங்களும் இன்றி சிருஷ்டி டாங்கே பங்கேற்றதால் கால்களில் பலத்த அடிபட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;