25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் - ராதிகா!

25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் - ராதிகா!

செய்திகள் 30-Mar-2015 11:00 AM IST Chandru கருத்துக்கள்

தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள ராதிகா, இதுவரை விஜய் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் 57 படங்களில் எந்தப் படத்திலும் நடித்தாக தெரியவில்லை. இந்த குறையைப் போக்கும் வகையில் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் விஜய்யுடன் நடிக்கவிருக்கிறார் ராதிகா.

விஜய் படத்தில் ராதிகா இணைவது இது முதல்முறையாக இருந்தாலும், ராதிகா கதாநாயகியாக நடித்த படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக ஏற்கெனவே நடித்திருக்கிறார். 1988ஆம் வருடம் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ராம்கி, ராதிகா, நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் ‘இது எங்கள் நீதி’. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்திருக்கிறார். அப்படத்தின் ஒரு காட்சியில் ராதிகாவுடன் இணைந்து விஜய் ஆடுவது போன்ற புகைப்படமும் அதற்கு சான்றாக இருக்கிறது.

‘இது எங்கள் நீதி’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்யும், ராதிகாவும் அட்லி இயக்கவிருக்கும் படத்தில் இணையவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;