‘கைபேசி காதல்’ விழாவில் இலியானாவின் இடுப்பு குறித்து பேரரசு பேச்சு!

‘கைபேசி காதல்’ விழாவில் இலியானாவின் இடுப்பு குறித்து பேரரசு பேச்சு!

செய்திகள் 30-Mar-2015 10:03 AM IST Top 10 கருத்துக்கள்

‘எஸ்.ஏ.வி. பிக்சர்ஸ்’ சார்பில் த.சக்திவேல் தயாரிப்பில், திம்மம் பள்ளி சந்திரா இயக்கியுள்ள படம் ‘கைபேசி காதல்’. இப்படத்தில் புதுமுகங்கள் கிரன், அர்பிதா, தர்சன், மாஸ்ட்ர் விக்‌னேஷ், டாக்டர் சூரி ஆகியோருடன் கிஷோர் முக்கிய கேரடரில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகம், சென்னையின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

இன்று பலரது காதலுக்கு கைபேசி உதவுகிறது. அதனால் கைபேசி மீது காதல் மோகம் அதிகரித்து வருகிறது. ஆனால் உயிர் இல்லாத கைபேசி மீதே ஒருவன் காதல் கொள்கிறான் என்றால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வித்தியாசமான கதை கொண்ட படமாம் ‘கைபேசி காதல்’. இந்த படத்திற்கு விஜயகிருஷ்ணா இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் விழாவில் அகில இந்திய நுகர்வோர் உரிமை இயக்கத் தலைவர் சி.சுந்தரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம.அருணகிரி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இயக்குனர் வி.சி.குகநாதன், பிராமி ராமநாதன், ஜாக்குவார் தங்கம், பி.ஆர்.ஓ. சங்கத் தலைவர் விஜயமுரளி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் த.சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, படக்குழுவினரை வாழ்த்திவிட்டு தான் சொந்த ஊரிலிருந்து 20 கீ.மீ. சைக்கிளில் சென்று ‘முரட்டுக்காளை’ படப்பிடிப்பு பார்த்த அனுபவத்தைக் கூறினார். எஸ்.பி.முத்துராமனின் எளிமையைப் பற்றிக் குறிப்பிட்டவர், ‘திறமை உள்ளவர்களுக்கு கர்வம், தலைக்கனம் இருக்கலாம். அது கர்ப்பிணிப் பெண்ணின் வயிறைப் போல மரியாதை தரக்கூடியது. திறமையில்லாதவர்களின் தலைக்கனம் என்பது தொப்பை பெண்ணின் வயிறு போன்றது. தொப்பையை ரசிக்க முடியுமா? திறமையும் இருந்து கர்வமும் இல்லாதவர்கள் இலியானாவின் வயிறு, இடுப்பு போன்றவர்கள். இலியானாவின் இடுப்பு மெலிதாக இருக்கும், ரசிக்கத் தக்கது. அப்படி ரசிக்கத் தக்க ஒருவர்தான் எஸ்.பி.முத்துராமன் அவர்கள்’’ என்றதும் அரங்கில் பலத்த சிரிப்பலை! அவரை தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட அத்தனை விஐபி-க்களும் ‘கைபேசி காதல்’ படம் குறித்தும் படக்குழுவினர் குறித்தும் பேசினார்கள்.

இப்படக் குழுவினரில் பெரும்பாலானோரும் கன்னடத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அனைவரும் தமிழில் பேச ரொம்பவும் சிரமப்பட்டார்கள்! இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் இப்படக் குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;