ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கும் அப்பா – மகள்!

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கும் அப்பா – மகள்!

செய்திகள் 28-Mar-2015 4:31 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நடித்த சோனாக்‌ஷி சின்ஹாவை ஹீரோயினாக்கி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ஹிந்தி படம் ‘அகிரா’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையைக் கொண்ட இப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவுடன் அவரது தந்தை சத்ருகன் சின்ஹாவும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்திலும் இவர்கள் அப்பா - மகளாக தான் நடிக்கிறார்களாம்! ஆனால் இருவரும் ஒன்றாக தோன்ற மாட்டார்களாம்! இதற்கு காரணம், சோனாக்ஷி சின்ஹாவின் சிறு வயது காட்சி ஒன்று படத்தில் வருகிறது என்றும் இந்த காட்சியில் குழந்தை நட்சத்திரம் ஒருவர் நடிப்பதால் அந்த குழந்தையுடன் தான் சத்ருகன் சின்ஹா வருவாராம். படத்தின் கதைப்படி சிறுவயதிலேயே தனது தந்தையை இழக்கும் சோனாக்‌ஷி சின்ஹா, வாழ்க்கையில் தனக்கு வரும் சவால்களை எப்படி சமாளித்து வெற்றி காண்கிறார் என்பது தான் இப்படத்தின் கதையாம்! இது அருள்நிதி நடித்த ‘மௌனகுரு’ படத்தின் கதையை தழுவி எடுகப்படும் படம் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, புனை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிச்சுவாகத்தி - என்ன சொன்ன பாடல் வீடியோ


;