சூர்யாவுடன் இணையும் ஆர்யா, விஜய்சேதுபதி!

சூர்யாவுடன் இணையும் ஆர்யா, விஜய்சேதுபதி!

செய்திகள் 28-Mar-2015 3:37 PM IST Top 10 கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் முதலானோர் நடித்துள்ள ‘புறம்போக்கு’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எஸ்.பி.ஜனநாதனின் ‘பினாரி பிக்சர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, வர்ஷன் இசை அமைத்துள்ளார். ஏராளமான நட்சத்திரங்கள், பெரும் பொருட் செலவு என பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும், பட தணிக்கையும் அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரத்தில் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . இதனை தொடர்ந்து ‘புறம்போக்கு’ படத்தை தொழிலாளர்கள் தினமான மே-1 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக ’யுடிவி’ தனஞ்சயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார் .

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் ‘மாஸ்’ படமும் தொழிலாளர் தினமான மே-1 ஆம் தேதி தான் ரிலீசாகிறது. பெரிய நட்சத்திரங்கள் நடித்த இரண்டு பெரிய படங்கள் மே-1 ஆம் தேதி ரிலீசாகவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;