விஜய், அட்லி படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்!

விஜய், அட்லி படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்!

செய்திகள் 28-Mar-2015 2:58 PM IST VRC கருத்துக்கள்

‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி அடுத்து விஜய்யை வைத்து படம் இயக்குகிறார். இது விஜய்யின் 59-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்பதும், இப்படத்திற்கு அட்லியின் ‘ராஜா ராணி’ படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாரே இசை அமைக்கிறார் என்பதும் ஏற்கெனவே முடிவான விஷயம்! தற்போது இப்படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷண் வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் அட்லி, படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகளின் தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் ராதிகா சரத்குமாரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதை அவரே ட்வீட் செய்துள்ளார் .

கமல், ரஜினி, அஜித், பிரசாந்த் உட்பட தமிழின் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள ராதிகா சரத்குமார் இதுவரை விஜய் கூட நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது! அப்படியிருக்கும் பட்சத்தில் இது விஜய், ராதிகா சரத்குமார் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;