‘காக்கா முட்டை’ டீமுக்கு தங்க செயின் பரிசளித்த தனுஷ்!

‘காக்கா முட்டை’ டீமுக்கு தங்க செயின் பரிசளித்த தனுஷ்!

செய்திகள் 28-Mar-2015 1:57 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் அறிவித்த தேசிய விருதுகளில் தமிழில் குழந்தைகளுக்கான சிறந்த படமாக ‘காக்கா முட்டை’க்கு விருது கிடைத்துள்ளது. தனுஷின் ‘வுண்டர்பார் நிறுவனமும், வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’யும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ள மகிழ்ச்சியில் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் தனுஷ், ‘காக்கா முட்டை’யில் நடித்துள்ள இரண்டு குழந்தைகளுக்கும், அதன் இயக்குனர் மணிகண்டனுக்கும் தங்கச் சங்கிலி பரிசளித்து கௌரவம் செய்துள்ளார். தங்கள் படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ள மகிழ்ச்சியில் இருக்கும் இரண்டு குழுந்தைகளும், இயக்குனர் மணிகண்டனும், தனுஷ் கையால் தங்க சங்கிலி பரிசு பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;