சம்மர் ட்ரீட்டாக வருகிறது வடிவேலுவின் ‘எலி’

சம்மர் ட்ரீட்டாக வருகிறது வடிவேலுவின் ‘எலி’

செய்திகள் 28-Mar-2015 1:26 PM IST VRC கருத்துக்கள்

‘தெனாலிராமன்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் யுவரஜ் தயாளனும், வடிவேலுவும் மீண்டும் கூட்டணி அமைத்து உருவாக்கி வரும் படம் ‘எலி’. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சதா நடிக்கிறார்.

1960- களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தை ‘சிட்டி சினி கிரியேஷன்ஸ்’ சார்பாக ஜி.சதீஷ் குமார் தயாரிக்கிறார். கடந்த ஃபிப்ரவரி 5-ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக நடைப்பெற்று வருகிறது. இப்படத்திற்காக சென்னையிலுள்ள பின்னி மில் வளாகத்தில் நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் பல கோடி ரூபாய் செலவில் கலை இயக்குனர் தோட்டாதரணியின் கைவண்ணத்தில் அமைக்கப்பட்டு அங்கு பல காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
மேலும் பல கோடி ருபாய் செலவில் நடனவீடு செட் அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கும் மேலாக, புகழ் பெற்ற மும்பை நடன கலைஞர்கள் ஆட, பிரபல நடன இயக்குனர் தாராவின் நடன அமைப்பில் பாடல் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு தான் இதில் கதாநாயகியாக நடிக்க சம்மதித்தாராம் சதா! தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வரும் ‘எலி’ ஏப்ரல் இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று மே மாதம் திரைக்கு வருகிறது.

இப்படத்தில் வடிவேலு, சதாவுடன் கஜினி புகழ் பிரதீப் ராவத், பெசன்ட் ரவி, மகாநதி சங்கர், சந்தானபாரதி, பாவா லட்சுமணன், போஸ் வெங்கட், பூச்சி முருகன், ராஜ்கபூர், வெங்கல் ராவ், கிருஷணமூர்த்தி ஆகியோரும் நடிக்கிறாகள். இந்தப் படத்திற்கு வித்யாசாகர் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை பால் லிவிங்ஸ்டன் ஏற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - செவத்த புள்ள பாடல் டீசர்


;