ஹைதராபாத்தில் ‘உத்தம வில்லன்’ ஆடியோ விழா!

ஹைதராபாத்தில் ‘உத்தம வில்லன்’ ஆடியோ விழா!

செய்திகள் 28-Mar-2015 11:26 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ அடுத்த மாதம் உலகம் முழுக்க ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு ஹைதராபாத்திலுள்ள ஷில்பகலா வேதிகா இன்டோர் ஆடிட்டோரியத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக கமல்ஹாசன், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி, போஸ், இசை அமைப்பாளர் ஜிப்ரான் உட்பட ‘உத்தம வில்லன்’ படக் குழுவினர் ஹைதராபத் புறப்பட்டு சென்றுள்ளனர். தமிழ் ‘உத்தம வில்லன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையிலுள்ள டிரேட் சென்டரில் நடந்ததும், இந்த நிகழ்ச்சி சென்ற வாரம் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பானதும் அனைவருக்கும் நினைவிருக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;