சமுத்திரக்கனி, விமல் படத்திற்கு ‘காவல்’ என பெயர் மாற்றம்!

சமுத்திரக்கனி, விமல் படத்திற்கு ‘காவல்’ என பெயர் மாற்றம்!

செய்திகள் 28-Mar-2015 10:17 AM IST Chandru கருத்துக்கள்

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தைத் தொடர்ந்து தற்போது விமல் கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றன. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவான ‘ரெண்டாவது படம்’ மற்றும் பசுபதியுடன் விமல் இணைந்து நடித்திருக்கும் ‘அஞ்சல’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர ‘நீயெல்லாம் நல்லா வருவடா’, ‘மாப்பிள்ளை சிங்கம்’ ஆகிய படங்களிலும் விமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

எஸ்.ஜி. ஃபிலிம்ஸ் நிறுவனமும், கிளாப் சினிமாவும் இணைந்து உருவாக்கிவரும் ‘நீயெல்லாம் நல்ல வருவடா’ படத்தின் தலைப்பை தற்போது ‘காவல்’ என மாற்றி வைத்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி போலீஸாக நடிக்கும் இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். மேலும் கீதா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி உட்பட பல நட்சதிரங்கள் நடிக்கும் இப்படத்தை நாகேந்திரன் இயக்குகிறார். வித்தியாசமாக உருவாகிவரும் இந்த ஆக்ஷன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஏப்ரலில் பாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;