சீனுராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ விருது!

சீனுராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ விருது!

செய்திகள் 28-Mar-2015 10:08 AM IST Chandru கருத்துக்கள்

தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சீனுராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ என்ற விருதை பாரம்பரியம் மிக்க மதுரைக் கல்லூரி வழங்கியுள்ளது. கடந்த 26ஆம் தேதி மதுரைக் கல்லூரி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாகவும், கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.முரளி மற்றும் பேராசிரியர் ந.ரத்தினக்குமார் ஆகியோரால் பட்டயச்சான்றிதழும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி விருதுபெற்ற பின்பு பேசியபோது...

‘‘வாழும் காலத்தில் பட்டப்பெயர்களை அடைமொழிகளை உடுத்திக் கொண்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதனின் மறைவிற்கு பிறகு அவன் இந்த சமூகத்திற்கு பயன்பட்ட விததில் மக்கள் தரும் பட்டப்பெயர்களே நிரந்தரமானவை. ஆயினும் மதுரையில் மதிப்புமிக்க மதுரைக் கல்லூரியின் கல்விக்குழுமம் வழங்கும் இவ்விருதினை ஏற்றுக்கொள்கிறேன். மேலும் இவ்விருதைப் பெறும் இச்சந்தர்பத்தில் பொறுப்புணர்சியும் கூடுகிறது’’ என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;