‘பீட்சா’ மைக்கேல் – அனு மீண்டும் கூட்டணி!

‘பீட்சா’ மைக்கேல் – அனு மீண்டும் கூட்டணி!

செய்திகள் 27-Mar-2015 11:57 AM IST VRC கருத்துக்கள்

‘இடம் பொருள் ஏவல்’, ‘புறம்போக்கு’, ‘மெல்லிசை’, ‘ஆரஞ்ச் மிட்டாய்’ என பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்து ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இப்படத்தை ‘வாசன் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் சேதுபதி! காக்கிச்சட்டையின் கம்பீரத்தையும், நேர்மையயும் விளக்கும் விதமாக இப்படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாம். ‘பீட்சா’ படத்தில் மைக்கேல் என்ற கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு என்ற கேரக்டரில் ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். இப்படத்திலும் ரம்யா நம்பீசனே விஜய் சேதுபதிக்கு ஜோடி! இவர்கள் இரண்டு பேரும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தில் படப்பிடிப்பு விரைவில் தவங்கவிருக்கிறது. இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பினை நிவாஸ் கே.பிரசன்னா ஏற்றிருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர்பிரசாத் கவனிக்க, கலையை பாலசந்தர் கவனிக்கிறார். விஜய்சேதுபதி முழுக்க முழுக்க போலீஸ் கேர்கடரில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;