பாலியல் வன்முறையாளர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் ‘ரு’

பாலியல் வன்முறையாளர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் ‘ரு’

செய்திகள் 27-Mar-2015 11:44 AM IST VRC கருத்துக்கள்

ஆனந்த் வீணா வழங்கும் ‘ரு’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், வி.ஜி.சந்தோஷம், இயக்குனர் பேரரசு, இயக்குனர் ரவிமரியா, ரமேஷ் கண்ணா, மீரா கிருஷ்ணன் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு ‘ரு’ படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள்! அப்போது இயக்குனர் பேரரசு பேசும்போது, ‘‘இந்த படத்தில்தான் நான் முதல் முதலில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தேன். மகிழ்ச்சி! பேசிய சம்பளம் முழுமையாக கொடுத்தார்கள். இங்கே விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் வந்திருக்கிறார். நான் அவர் அருகில் அமரும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி’’என்றார்!

‘தீநகர்’ படத்தை இயக்கிய திருமலையிடம் உதவியாளராக இருந்த சதாசிவம் ‘ரு’ படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் இர்ஃபான் கதாநாயகனாக நடிக்க, ரக்‌ஷிதா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் பேரரசு, ஆதவன், ரவி, அவினாஷ், மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். பி.ஆர்.ஸ்ரீநாத் இசை அமைத்துள்ளார். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் திருமலை தனது சிஷ்யன் இயக்கியுள்ள ‘ரு’ படம் குறித்து பேசும்போது, ‘‘ரு’ என்றால் ஐந்து என்று அர்த்தம்! ஆனால் இப்படம் ஐம்புலன்கள் ஒன்று சேரும்போது என்ன நடக்கும் என்பதை ஐந்து கதாபாத்திரங்கள் மூலம் சொல்லும் கதையே! இப்போது நாடு முழுக்க நடந்துகொண்டிருக்கும் பாலியல் வன்முறைகள் பற்றி நாம் பேசி வருகிறோம். ஆனால் அப்படி பாலியல் வன்முறையில் ஈடுபடுபடுபவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே! பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை வழங்க வேண்டும் என்பதே ‘ரு’ படம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டீசர்


;