ஏப்ரல் 1-ல் சிங்கிள் டிராக், 5-ல் முழுப் பாடல்கள்!

ஏப்ரல் 1-ல் சிங்கிள் டிராக், 5-ல் முழுப் பாடல்கள்!

செய்திகள் 27-Mar-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

ஒரு இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் ‘36 வயதினிலே’. இப்படத்தின் ஆடியோ ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் ஏப்ரல் 1-ஆம் தேதி இப்படத்தின் ‘ராசாத்தி’ பாடலை மட்டும் தான் வீடியோ வடிவில் வெளிடுகிறார்கள். இப்பாடலின் வெளியீட்டை தொடர்ந்து படத்தின் மொத்த பாடல்களை ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்! சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் ரீ-மேக் என்பதும், இப்படத்தை ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கியிருக்கிறார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கோலிவுட்டில் மட்டுமல்லாமல் ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் மே மாதம் ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;