வின்சென்ட் செல்வாவின் ‘அராத்து’

வின்சென்ட் செல்வாவின் ‘அராத்து’

செய்திகள் 26-Mar-2015 4:58 PM IST VRC கருத்துக்கள்

‘ப்ரியமுடன்’, ‘யூத்’, மற்றும் ‘ஜித்தன்’ படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தனது பெயரை ப்ரியமுடன் ஷெல்வா என மாற்றியுள்ளார். பல வெற்றி படங்களை தந்துள்ள ப்ரியமுடன் ஷெல்வா இப்போது தனது அடுத்த படமான ‘அராத்து’ திரைப்படத்தின் வேலைகளில் தீவிரம் ஆகியுள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வட சென்னையை களமாகக் கொண்டதாம் இப்படம். இப்படத்தில் விஜய் கார்த்திக், சம்பி ஆகிய புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ‘டங்கா மாரி’ பாடல் புகழ் விஜி இரண்டு பாடல்களை எழுதி, பாடுகிறார். ‘அராத்து’ கதைக்காக வட சென்னையை செட் போட்டு அதில் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார் ப்ரியமுடன் ஷெல்வா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் - டிரைலர்


;