கமலிடம் மன்னிப்பு கேட்டார் ஆமிர்கான்!

கமலிடம் மன்னிப்பு கேட்டார் ஆமிர்கான்!

செய்திகள் 26-Mar-2015 3:19 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ பட விவகாரத்தில் அப்போது கமலுக்கு ஆதரவு தெரிவிக்காமல், ‘‘மக்களை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் உள்ள படங்களை தடை செய்ய வேண்டும்’’ என்று ‘விஸ்வரூபம்’ படத்திற்கு எதிராக அப்போது கருத்து தெரிவித்திருந்தார் பாலிவுட் நடிகர் ஆமீர்கான். இதற்கு சமீபத்தில் மும்பையில் கமல்ஹாசனும், ஆமீர்கானும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் கமலிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டர் ஆமீர்கான். அப்போது ஆமீர்கான் பேசும்போது,

‘‘அப்போது ‘விஸ்வரூபம்’ படம் குறித்து நான் கூறிய கருத்து தவறானது என்பதை பிறகு உணர்ந்து கொண்டேன்! அதற்காக வெட்கப்பட்டேன்! ஒரே துறையில் இருக்கும் நாங்கள் அப்போது ஒன்றாக இணைந்திருக்க வேண்டும்! அப்போது நான் எனது சொந்த வேலைகளில் மூழ்கியிருந்ததால் அந்த உணர்வு என்னிடம் வரவில்லை! அரசாங்கம் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு படத்தை எந்தவித அச்சுறத்தலும் இல்லாமல் மக்கள் பார்க்க அந்த மாநில அரசு வழிவகை செய்யவேண்டும். அது அரசாங்கத்தின் கடமை! கமல்ஹாசனுக்கு அப்போது ஆதரவு அளிக்க தவறியதற்காக இப்போது நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அந்நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ஆமீர்கான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;