சிம்புவை இயக்கும் கிருத்திகா உதயநிதி!

சிம்புவை இயக்கும் கிருத்திகா உதயநிதி!

செய்திகள் 26-Mar-2015 2:46 PM IST VRC கருத்துக்கள்

‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி அடுத்து இயக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’, கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடைமையடா’ ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு அடுத்து செல்வராகவன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகே கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிப்பாராம் சிம்பு! கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு இசை அமைத்த அனிருத் தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர்! தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருக்கும் கிருத்திகா உதயநிதி, விரைவிலேயே படத்திற்கான ஹீரோயின், மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை அறிவிக்க உள்ளாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;