ஜீவாவுடனும் ஜோடி சேருகிறாரா கீர்த்தி சுரேஷ்?

ஜீவாவுடனும் ஜோடி சேருகிறாரா கீர்த்தி சுரேஷ்?

செய்திகள் 26-Mar-2015 12:25 PM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, விக்ரம் பிரபுவுடன் ‘இது என்ன மாயம்’, பாபி சிம்ஹாவுடன் ‘பாம்பு சட்டை’ என தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்! இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், ஜீவா நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடிக்கவும் கீர்த்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படத்தில் நடிப்பது குறித்து கீர்த்தி இன்னும் முடிவு செய்யவில்லையாம்! பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்! ‘யாமிருக்க பயமே’ படப் புகழ் டீகே இயக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஜீவாவுடன் பாபி சிம்ஹா, இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க தான் கீர்த்திக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்! ஜீவா நடித்த ‘யான்’ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தான் ‘கவலை வேண்டாம்’ படத்தையும் தயாரிக்கிறது. ஜீவாவுடன் நடிப்பது குறித்து நாம் கீர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, கால்ஷீட்ஸ் ஒத்து வந்தால் ஜீவாவுடன் கண்டிப்பா நடிப்பேன்’’ என்றார் கீர்த்தி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;