ஏப்ரல் 1-ஆம் தேதி ஜோதிகா படப்பாடல்கள்!

ஏப்ரல் 1-ஆம் தேதி ஜோதிகா படப்பாடல்கள்!

செய்திகள் 26-Mar-2015 11:35 AM IST VRC கருத்துக்கள்

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா, ஒரு இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள படம் ‘36 வயதினிலே’. மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் ரீ-மேக்கான இப்படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான ‘2டி என்டர்டெயின்மென்ட் ’ தயாரித்துள்ளது. மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜோதிகாவுடன் ரஹ்மான், அபிராமி முதலானோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் ஆடியோ இம்மாதம் 29-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஆடியோ வெளியீட்டை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சூர்யா தயாரிப்பில் முதன் முதலாக வெளிவரும் படம் இது என்பதாலும், ஒரு இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் இது என்பதாலும் இப்படத்தின் மீது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து இப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;