37 படங்களைக் கடந்து 50வது நாளில் ‘என்னை அறிந்தால்’

37 படங்களைக் கடந்து 50வது நாளில் ‘என்னை அறிந்தால்’

செய்திகள் 26-Mar-2015 10:50 AM IST Chandru கருத்துக்கள்

நிச்சயம் இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு வெற்றிதான். ஒரு படம் வெளியாகி 2 வாரங்களைக் கடப்பதே பெரிய விஷயமாகிவிட்ட இன்றைய தமிழ் சினிமா சூழலில் கிட்டத்தட்ட 7 வாரங்களைக் கடந்து 50வது நாளில் அடியெடுத்து வைக்கிறது அஜித்தின் ‘என்னை அறிந்தால்’. அதுவும் இப்படம் வெளியான பிறகு தோராயமாக 37 புதிய தமிழ் படங்கள் வெளியாகியிருப்பது இன்னுமொரு ஆச்சரியம். மற்ற மொழிப் படங்களையும் சேர்த்தால் இந்த பட்டியல் எப்படியும் 50 படங்களை எட்டும்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வெளியானது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம். வித்தியாசமான கூட்டணியில் உருவான படம் என்பதோடு ‘தல’ போலீஸாக நடித்திருப்பதும் கூடுதல் எதிர்பார்ப்பைத் தர இப்படத்திற்கு உலகமெங்கும் நல்ல ஓபனிங் கிடைத்தது. குறிப்பாக ‘ஏ’ சென்டர்களில் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படும் இப்படம் தற்போது 50வது நாளைத் தொட்டபிறகும் முக்கிய திரையரங்குகளில் இன்னும் ஒரு சில காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 5ஆம் தேதி வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை வரை கிட்டத்தட்ட 37 படங்கள் இதுவரை வெளியாகிவிட்டன. அதிலும் இந்த மார்ச் மாதம் மட்டும் கிட்டத்தட்ட 20 படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதோடு தனுஷின் ‘அனேகன்’, சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ படங்களும் வெளியான பிறகும்கூட ‘என்னை அறிந்தால்’ படம் இன்னமும் ஓடிக் கொண்டிருப்பதால் ‘தல’ ரசிகர்கள் உற்சாகத்திலிருக்கிறார்கள். 50வது நாளை தமிழகத்தின் ஒரு சில திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடியும் வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;