விஷால் படத்திற்கு மீண்டும் ரஜினி பட டைட்டில்!

விஷால் படத்திற்கு மீண்டும் ரஜினி பட டைட்டில்!

செய்திகள் 26-Mar-2015 10:42 AM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு ‘பாயும் புலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கிய நாளிலிருந்தே இப்படத்திற்கு பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் ரஜினி நடித்த ஒரு படத்தின் டைட்டிலை விஷால் படத்திற்கு சூட்டியுள்ளனர். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ படமும் ஏற்கெனவே ரஜினிகாந்த் நடித்த பட டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விஷாலின் போலீஸ் கேரக்டருக்கு ‘பாயும் புலி’ என்ற டைட்டில் மிக பொருத்தமாக இருக்கும் என்றே நம்புவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;