நீதிமன்றம் சென்ற ‘டண்டணக்கா’ சர்ச்சை!

நீதிமன்றம் சென்ற ‘டண்டணக்கா’ சர்ச்சை!

செய்திகள் 25-Mar-2015 4:35 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ள படம் ‘ரோமியோ ஜூலியட்’. லக்‌ஷ்மன் இயக்கி வரும் இப்படத்தில் ‘ஜெயம்’ ரவி நடிகர் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகரக நடிக்கிறார். இப்படத்திற்காக டி.ராஜேந்தர் தனது படங்களில் பயன்படுத்தும் ‘டண்டணக்கா…’ என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் படத்தில் பயன்படுத்தியிருப்பது குறித்து ஜெயம் ரவி விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இந்தப் பாடலை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு சிலர் உருவாக்கியுள்ள வீடியோவில் டி.ராஜேந்தரை தவறாக சித்தரிக்கப்பட்டு, அது இணையதளங்களில் வெளியாகவும் செய்தன. இதை பார்த்து ஜெயம் ரவி தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். ஆனால் இதையெல்லாம் ஏற்காத டி.ராஜேந்தர் இப்போது ‘ரோமியோ ஜூலியட்’ படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதில் ‘டண்டணக்கா’ பாடலை தொடர்ந்து ஒலிபரப்பவும், புரொமோஷன் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இதனால் ‘ரோமியோ ஜூலியட்’ படக்குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;