‘சௌகார்பேட்டை’யில் இணையும் பவர்ஸ்டார், ராஜேந்திரன்!

‘சௌகார்பேட்டை’யில் இணையும் பவர்ஸ்டார், ராஜேந்திரன்!

செய்திகள் 25-Mar-2015 11:28 AM IST Chandru கருத்துக்கள்

250 நாள் ‘லத்திகா’ படத்தை ஓட்டிய அதிரடி நாயகன் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசனும், லேட்டஸ்ட் காமெடி கிங் ‘கோஸ்ட் கோபால் வர்மா’ புகழ் ராஜேந்திரனும் புதிய படமென்றில் இணைகிறார்கள். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘சௌகார்பேட்டை’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. காஞ்சனா, அரண்மனை படங்களைத் தொடர்ந்து இந்த ஹாரர் படத்திலும் லட்சுமிராய் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உட்பட பல நட்திரங்கள் நடிக்கிறார்கள்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பின்புறமுள்ள சௌகார்பேட்டை ஏரியாவை மையமாக வைத்துதான் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ஹாரர் + காமெடி கலந்த இந்த பேய்ப்படத்தை ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ பட இயக்குனர் வடிவுடையான் இயக்கவிருக்கிறார். ஜான் பீட்டர் இசையமைக்க, சீனிவாச ரெட்டி இப்படத்திற்கு ஒளிப்பதிவை கவனிக்கிறார். மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களைத் தொடர்ந்து ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ ஜான்மேக்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மொட்ட சிவா கெட்ட சிவா - டிரைலர்


;