தொடர்ந்து 2வது முறையாக தேசிய விருதை வென்ற நா.முத்துக்குமார்!

தொடர்ந்து 2வது முறையாக தேசிய விருதை வென்ற நா.முத்துக்குமார்!

செய்திகள் 25-Mar-2015 10:53 AM IST Chandru கருத்துக்கள்

2013ல் ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘தங்க மீன்கள்’ படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகின்றாள்...’ பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் வெளிவந்த ‘சைவம்’ படத்தில் ‘அழகே அழகு...’ பாடலை எழுதியதற்காகவும் நா.முத்துக்குமாருக்கு மீண்டும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து கவிஞர் நா.முத்துக்குமார் பத்திரிகை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்...

‘‘சைவம் படத்தில் நான் எழுதிய ‘அழகே அழகு...’ பாடலுக்காக 2014ஆம் ஆண்டிற்கான தேசிய விருது எனக்குக் கிடைத்துள்ளது. அன்பையும், மனிதநேயத்தையும் குழைத்து எழுதிய இந்தப் பாடலுக்கு தேசிய விருது பெறுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் ‘சைவம்’ படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஏ.எல்.விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், பாடலைப்பாடிய உத்ரா உன்னிகிருஷ்ணன், தேர்வுக்குழு தலைவர் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய விருது பெற்ற சக கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;