தினேஷ், மியாவின் ‘ஒரு நாள் கூத்து’

தினேஷ், மியாவின் ‘ஒரு நாள் கூத்து’

செய்திகள் 25-Mar-2015 10:14 AM IST Chandru கருத்துக்கள்

‘அமரகாவியம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். இப்படம் வசூல்ரீதியாக சரியாகப் போகவில்லையென்றாலும், மியாவின் நடிப்பை பாராட்டாத பத்திரிகைகளே இல்லையெனும் அளவுக்கு அவரின் நடிப்பிற்கு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பரவலான வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து அவருக்கு உடனடியாக விஷ்ணுவுடன் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ‘இன்று நேற்று நாளை’ படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் மியாவைத் தேடி தற்போது இன்னொரு வாய்ப்பும் வந்திருக்கிறது.

‘ஒரு நாள் கூத்து’ என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய படமொன்றில் ‘அட்டகத்தி’ தினேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் மியா. அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கிராமத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகை மியாவுக்கு ‘லட்சுமி’ என்ற கிராமத்துப் பெண் வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வரும் மார்ச் 30ஆம் தேதி முதல் சென்னையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்குகிறது. நடிகை மியாவுக்கான படப்பிடிப்பு காட்சிகள் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் திண்டுக்கல்லில் இருந்து துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;