‘கொம்பன்’ அனைவருக்கும் ஏற்ற படம்!

‘கொம்பன்’ அனைவருக்கும் ஏற்ற படம்!

செய்திகள் 25-Mar-2015 10:00 AM IST Chandru கருத்துக்கள்

வடசென்னை வாசியாக கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துவாசியாக அவர் நடித்திருக்கும் படம் ‘கொம்பன்’. ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக முதல்முறையாக லட்சுமிமேனன் நடித்திருக்கிறார். மாமனார், மருமகனுக்கிடையே இருக்கும் பாசப்பிணைப்பைப் பற்றி பேசவிருக்கும் இப்படத்தில் கார்த்தியின் மாமனாராக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, கருணாஸ் உட்பட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘கொம்பன்’ படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் ‘கொம்பன்’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டுகளிக்கலாம் என தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டதால் உற்சாகத்திலிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரான ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா. தமிழகத்தில் மட்டும் 350 தியேட்டர்களுக்கும் அதிகமாக ‘கொம்பன்’ வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;