தேசிய விருதை வென்று சாதித்த குற்றம் கடிதல்!

தேசிய விருதை வென்று சாதித்த குற்றம் கடிதல்!

செய்திகள் 24-Mar-2015 4:09 PM IST Chandru கருத்துக்கள்

JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் Chris பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் 62வது தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ திரைப்படதிற்கும் இவ்விருதினை வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தேசிய விருது வெல்லும் பெருமையை பெற்றுள்ளது JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம். பிரம்மா G இயக்கியுள்ள இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து JSK ஃபிலிம் கார்பரேஷனின் சதீஷ்குமார் பேசும்போது,

“தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. நல்ல படங்கள் அதற்கான அந்தஸ்தை பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்நிறுவனத்தை ஆரம்பித்தோம். எல்லா இடங்களிலிருந்தும் தொடர்ந்து கிடைக்கும் ஆதரவும், விருதுகளும் என்னை மென்மேலும் நல்ல படங்களைத் தயாரிக்க ஊக்கப்படுத்துகிறது.

“குற்றம் கடிதல் திரைப்படத்திற்கு தொடர்ந்து குவியும் விருதுகளாலும், பாராட்டுகளாலும் மக்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த எதிர்பார்ப்பு வியாபார ரீதியிலும், மக்களுக்கு படத்தை எடுத்து செல்வதையும் எளிதாக்கியுள்ளது. மிக விரைவில் இப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நல்லெண்ணமும், தணிந்த பார்வையும், தேர்ந்த யுக்திகளும், தரம் வாய்ந்த படைப்புகளுமே எங்கள் நிறுவனத்தின் நான்கு தூண்களாய் நான் கருதுகிறேன்.” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;