தமிழ்ப்புத்தாண்டுக்கு ‘புலி’யின் முதல் பார்வை?

தமிழ்ப்புத்தாண்டுக்கு ‘புலி’யின் முதல் பார்வை?

செய்திகள் 24-Mar-2015 10:03 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் படுபிஸியாகப் போய்க்கொண்டிருக்கின்றன. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ சுதீப் என ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளங்கள் நடிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலுக்கே வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது ‘புலி’ என்ற டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதியான தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ‘புலி’யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லையென்றாலும் ‘புலி’யின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட இதுதான் சரியான தருணமாகும் என்பதால் தற்போது இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;