ஜெயம் ரவி படத்தில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி!

ஜெயம் ரவி படத்தில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி!

செய்திகள் 24-Mar-2015 9:46 AM IST Chandru கருத்துக்கள்

2012ல் வெளிவந்த ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த ஆதி, இந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த விஷாலின் ‘ஆம்பள’ படம் மூலம் இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து அவரைத் தேடி தற்போது பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் போய்க்கொண்டிருக்கும் விஷ்ணுவின் ‘இன்று நேற்று நாளை’ படத்திற்கு ஆதிதான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’ படத்திற்கும் ஆதியை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஜெயம் ராஜா இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ‘தனி ஒருவன்’ படத்திற்காக ஆதியின் இசையில் ஒரேயொரு பாடல் பதிவு செய்யப்பட்டுவிட்டதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;