ஜெய்க்கு கிரீன் சிக்னல் காட்டிய சென்சார்!

ஜெய்க்கு கிரீன் சிக்னல் காட்டிய சென்சார்!

செய்திகள் 23-Mar-2015 4:13 PM IST Chandru கருத்துக்கள்

‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தைத் தொடர்ந்து ஜெய் நடித்திருக்கும படம் ‘வலியவன்’. எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களைத் தொடர்ந்து சரவணன் இயக்கியிருக்கும் இந்த 3வது படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஆன்ட்ரியா நடித்திருக்கிறார். இதுவரை ‘அமுல்பேபி’யாக சுற்றிக் கொண்டிருந்த ஜெய், ‘வலியவன்’ படத்தில் சிக்ஸ் பேக் வைத்து ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். டி.இமான் இசையமைப்பில் உருவான பாடல்கள் ஏற்கெனவே வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றுள்ளது.

எஸ்.கே. ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் 27ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. ஏற்கெனவே இதே தேதியில் வெளியாவதாக இருந்த வாலு, கொம்பன் படங்களின் ரிலீஸ் தேதி மாறியுள்ளதால் ஜெய்யின் ‘வலியவன்’ படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;