3 மாதங்களுக்கு தொடர்ந்து ஒலிக்கப்போகும் இளையராஜா பாடல்கள்!

3 மாதங்களுக்கு தொடர்ந்து ஒலிக்கப்போகும் இளையராஜா பாடல்கள்!

செய்திகள் 23-Mar-2015 3:55 PM IST Chandru கருத்துக்கள்

‘ரேடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதே இளையராஜாவின் பாடல்களை கேட்பதற்குத்தான்’ எனும் அளவுக்கு ராஜாவின் பாடல்களே பெரும்பாலான வானொலி ஸ்டேஷன்க¬யும், எஃப்.எம் எனப்படும் பன்பலைவரிசைகளையும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் ராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவதுதான் பெரும்பாலான தமிழ் ரசிகர்களின் வாடிக்கை. அந்தளவுக்கு ராஜா தமிழர்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, கிட்டத்தட்ட 6000 பாடல்களுக்கு மேல் தமிழ்சினிமாவுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ள ராஜாவை கௌரவிக்கும் வகையிலும், அவரின் பாடல்களை முன்னிலைப்படுத்தி கின்னஸ் சாதனை ஒன்றை படைக்கும் நோக்கத்துடனும் ரேடியோ சிட்டி 91.1 பன்பலைவரிசை புதிய முயற்சி ஒன்றில் களமிறங்கவிருக்கிறது. அதாவது தொடர்ந்து 91.1 நாட்களுக்கு முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை மட்டுமே ஒலிபரப்பத் திட்டமிட்டுள்ளது ரேடியோ சிட்டி எஃப்.எம். இந்த தகவல் இளையராஜாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;