செல்வராகவன் படத்தில் சிம்புவுக்கு இரண்டு ஜோடி!

செல்வராகவன் படத்தில் சிம்புவுக்கு இரண்டு ஜோடி!

செய்திகள் 23-Mar-2015 12:18 PM IST VRC கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. செல்வராகவனும், சிம்புவும் முதன் முதலாக இணையும் இப்படம் செல்வராகவன் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஜானரில் தயாராக இருக்கிறதாம். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் என்பது ஏற்கெனவே முடிவான விஷயம்! செல்வராகவன் உருவாக்கியுள்ள இப்பட கதையில் இரண்டு கதாநாயகி கேரக்டர்கள் இருக்கிறது என்றும், இரண்டு கேரக்டரும் சம அளவில் பயணிப்பது மாதிரி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதனால் இன்னொரு கதாநாயகி கேரக்டரில் டாப்ஸியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார் செல்வராகவன் என்றும், இப்படத்தில் நடிக்க டாப்சி ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. செல்வராகவனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;