டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ‘காமராஜ்’ படம்!

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ‘காமராஜ்’ படம்!

செய்திகள் 23-Mar-2015 11:38 AM IST VRC கருத்துக்கள்

2004-ல் வெளியான ‘காமராஜ்’ திரைப்படம் புதிதாக படமாக்கப்பட்ட சில காட்சிகளுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. ‘‘தகவல் தொழில் நுட்பம், இணையம், சமூக ஊடகங்களை பயன்படுத்தி நாட்டின் வரலாற்றை தீர்மானிக்கும் இன்றைய நவீன இளைஞர்களிடம் பெருந்தலைவரின் அரசியல் பண்பை எடுத்துச்செல்வதே இந்த மறு வெளியீட்டின் நோக்கமாகும்’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் அ.பாலகிருஷ்ணன்.

இப்படத்தின் இணைப்புக் காட்சிகளில் பிரதீப் மதுரம் காமராஜர் வேடத்தில் நடித்துள்ளார். சுதந்திரப்போராட்ட தியாகியின் மகனாக இயக்குனர் சமுத்திரகனி நடித்துள்ளார். சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் வெளியீட்டுச் செலவு தொகை காமராஜர் ஆர்வலர்களிடம் திரட்டப்பட்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக பெருந்தலைவர் காமராஜரின் பக்தராக திகழும் புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களிடம் திரைப்படத்தின் இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் உதவி கோரினார். திரைப்படத்துக்கு அவர் உதவி செய்வதாகவும், புதுவையில் திரையிட ஆவன செய்வதாகவும் முதல்வர் கூறினார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ தயாரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சமின்றி - டிரைலர் 2


;