பிரம்மாண்டமாக ரிலீசாகும் ‘கொம்பன்’

பிரம்மாண்டமாக ரிலீசாகும் ‘கொம்பன்’

செய்திகள் 23-Mar-2015 10:59 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ ஏப்ரல் 2-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கிறது. ‘குட்டிப்புலி’ படப்புகழ் முத்தைய்யா இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்க, ராஜ்கிரண், கோவை சரளா முதலானோரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்களும் டிரைலரும் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ‘பருத்தி வீரன்’ படத்திற்கு பிறகு கார்த்தி முழுக்க முழுக்க கிராமத்து கதையில் நடித்துள்ள படம் ‘கொம்பன்’. கார்த்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய, திட்டமிட்டுள்ளது ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம். தமிழகத்தில் மட்டும் ‘கொம்பன்’ 360-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. அதைப் போலவே கேரளாவிலும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;