29-ஆம் தேதி ‘36 வயதினிலே’ படப் பாடல்கள்!

29-ஆம் தேதி ‘36 வயதினிலே’ படப் பாடல்கள்!

செய்திகள் 23-Mar-2015 10:39 AM IST VRC கருத்துக்கள்

ஒரு இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் ‘36 வயதினிலே’. மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் ரீ-மேக்கான இப்படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான ‘2டி என்டர்டெயின்மென்ட் ’ தயாரித்துள்ளது. மலையாள ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஜோதிகாவுடன் ரஹ்மான், அபிராமி முதலானோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் நடித்துள்ள படம் இது என்பதால் கோலிவுட்டில் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் பாடல்கள் வருகிற 29- ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து ’36 வயதினிலே’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - டிரைலர்


;