பேய்ப்பட நாயகியாகும் த்ரிஷா!

பேய்ப்பட நாயகியாகும் த்ரிஷா!

செய்திகள் 23-Mar-2015 10:25 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘அப்பா டக்கர்’, சிம்புவுடன் செல்வராகவன் படம் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. அதோடு தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் 3 நாயகிகள் நடிக்கும் படமொன்றிலும், பாலகிருஷ்ணாவுடன் ‘லயன்’ படத்திலும் இன்னொருபுறம் நடித்துக் கொண்டிருக்கிறார். மேற்கண்ட படங்களைத் தவிர்த்து தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் த்ரிஷா.

த்ரிஷாவின் மேனேஜரான கிரிதர் இப்படத்தை ‘கிரிதர் புரொடக்ஷன் ஹவுஸ்’ என்ற பெயரில் தயாரிக்கிறார். ஹாரரும், காமெடியும் கலந்த இந்த பேய்ப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் உருவாகவிருக்கிறது. ‘லவ் யூ பங்காரம்’ படத்தின் இயக்குனர் கோவி இப்படத்தை இயக்கவிருக்கிறார். மே மாதத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக நடிகை த்ரிஷா ‘ட்வீட்’ செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மோகினி - டிரைலர்


;