‘‘ஹாட்ரிக் வெற்றிக்கு நன்றி!’’ - சிவகார்த்திகேயன், அனிருத்

‘‘ஹாட்ரிக் வெற்றிக்கு நன்றி!’’ - சிவகார்த்திகேயன், அனிருத்

செய்திகள் 23-Mar-2015 9:56 AM IST Chandru கருத்துக்கள்

பிப்ரவரி 27ஆம் தேதி ரிலீஸான ‘காக்கி சட்டை’ படம் 25வது நாளைக் கடந்து இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ‘எதிர்நீச்சல்’ ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்திருந்த இப்படத்தை தனுஷ் தயாரித்தார். எதிர்நீச்சல், மான்கராத்தே படங்களைத் தொடர்ந்து ‘காக்கி சட்டை’ மூலம் சிவகார்த்திகேயனுடன் 3வது முறையாக கூட்டணி அமைத்தார் இசையமைப்பாளர் அனிருத்.

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையான திரையரங்குகள் எண்ணிக்கையில் வெளியான இப்படம் முதல் 3 நாட்களிலேயே 10 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இப்போது 25 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் ‘காக்கி சட்டை’யை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி சொல்லியிருக்கிறார்கள் நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும். குறிப்பாக ‘காக்கி சட்டை’ படம் சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்திருப்பதாகவும் அவர்கள் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதோடு எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கி சட்டை என தங்கள் கூட்டணி தந்துள்ள ‘ஹாட்ரிக் ஹிட்’ எனவும் சிவகார்த்திகேயனும், அனிருத்தும் கூறியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;