‘ரஜினி முருகனி’ன் சூப்பர் ரிலீஸ் பிளான்!

‘ரஜினி முருகனி’ன் சூப்பர் ரிலீஸ் பிளான்!

செய்திகள் 21-Mar-2015 12:07 PM IST Chandru கருத்துக்கள்

‘காக்கி சட்டை’ படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தின் போஸ் பாண்டி சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முதலில் ‘ரஜினி முருகன்’ படத்தை மே 1ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருப்பதால் அதன் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் கொம்பன் மற்றும் மாஸ் படங்களின் வெளியீட்டிற்குப் பிறகு ஜூலை 17ஆம் தேதி (ரம்ஜான் பண்டிகை வாரம்) ‘ரஜினி முருகன்’ படத்தை ரிலீஸ் செய்கிறது ஸ்டுடியோ கிரீன்.

அதற்கு முன்பாக ‘ரஜினி முருகனி’ன் ஃபர்ஸ்ட் லுக்கை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் விஜய் அவார்ட்ஸ் விழாவில் வெளியிடுகிறார்கள். அதோடு டி.இமான் இசையமைப்பில் உருவாகும் பாடல்களை ஜூன் 7ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்


;