‘நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி!

‘நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனரின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி!

செய்திகள் 21-Mar-2015 11:55 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த வருடம் வெளிவந்த தமிழ்ப் படங்களில் அதிரடி ஹிட்டடித்த படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’. படம் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் சிபிராஜின் இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவங்குவதற்கும் கைகொடுத்த இப்படத்தை ‘நாணயம்’ சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்தார். சிபிராஜின் ஹோம் பேனரான ‘நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ இப்படத்தை தயாரித்தது.

‘நாய்கள் ஜாக்கிரதை’யின் வெற்றிக்குப் பின்னர் சிபிராஜ் நடிக்கும் ‘ஜாக்சன் துரை’ படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டது. அதோடு இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனும் தனது அடுத்த படத்தை அறிவித்துவிட்டார். ஆம்... ஜெயம் ரவியை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார் அவர். மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடைன்மென்ட்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஜெயம் ரவி தற்போது ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘அப்பா டக்கர்’ படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து அவர் சக்தி சௌந்தர்ராஜன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - டிரைலர்


;