விஜய், அஜித்தைத் தொடர்ந்து விக்ரம்!

விஜய், அஜித்தைத் தொடர்ந்து விக்ரம்!

செய்திகள் 21-Mar-2015 10:57 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த வருடம் வெளிவந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் விஜய்யின் ‘கத்தி’. இப்படத்தின் மூலம் முதல்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்தார் அனிருத். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளிவந்தபோதே அதன் தீம் மியூசிக் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘கத்தி’யின் பாடல்களும் ஹிட் ஆனதில் விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதந்தனர்.

‘கத்தி’யின் மூலம் விஜய்யுடன் இணைந்த அனிருத், தற்போது ‘வீரம்’ சிவா இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் ‘தல’ அஜித்துடனும் கூட்டணி அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒருசில வாரங்களில் துவங்கவிருக்கிறது. இப்படத்திற்காக ஸ்பெஷல் தீம் ஒன்றை அனிருத் உருவாக்கவிருக்கிறாராம். விஜய், அஜித்தைத் தொடர்ந்து இப்போது விக்ரமுடனும் முதல்முறையாக இணைகிறார் அனிருத். ஏற்கெனவே ஷங்கரின் ‘ஐ’ படத்தில் ‘மெர்சலாயிட்டேன்...’ பாடலை அனிருத் பாடியிருந்தார்.

‘10 எண்றதுக்குள்ள’ படத்தைத் தொடர்ந்து ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்திற்குதான் அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;