‘மாயா’ தயாரிப்பாளர்களின் அடுத்த படம்?

‘மாயா’ தயாரிப்பாளர்களின் அடுத்த படம்?

செய்திகள் 21-Mar-2015 10:10 AM IST Chandru கருத்துக்கள்

நயன்தாராவை நாயகியாக்கி ‘மாயா’ என்ற படத்தை தயாரித்து வருகிறது ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம். இந்த ஹாரர் படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்க, ஒளிப்பதிவை சத்யன் சூர்யனும், இசையை ரான் யோஹனும் கவனிக்கிறார்கள். முழுக்க முழுக்க நயன்தாராவை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த ‘மாயா’வில் முக்கிய வேடமொன்றில் ‘நெடுஞ்சாலை’ ஆரியும் நடிக்கிறார். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்திலிருக்கும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

‘மாயா’வுக்கான ரிலீஸ் தேதியை இறுதி செய்யும் பணியில் இருக்கும் அதேநேரம், தனது அடுத்த படத்தையும் சத்தமில்லாமல் துவங்கியுள்ளது ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம். ‘டார்க் காமெடி’ ரகத்தைச் சேர்ந்த இப்படத்தில் தான் நாயகனாக நடிப்பதாக ‘யாருடா மகேஷ்’ படத்தின் ஹீரோ சந்தீப் கிஷான் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். குறும்பட இயக்குனர் லோகேஷ் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார். இப்படம் குறித்த முழுமையான விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலக்கூத்து - டிரைலர்


;