கள்ளப்படம் – விமர்சனம்

வித்தியாச விரும்பிகளுக்கு மட்டும்!

விமர்சனம் 20-Mar-2015 5:46 PM IST Top 10 கருத்துக்கள்

Director : J.Vadivel
Production : Iraivan Films
Cast : Vadivel, Sriram santhosh, Kaakin, k, Lakshmi Priya, Naren, Singam puli, Jishnu, Kavitha Barathi
Music : K
Camera :.Sreeram Santhosh
Editing : Kaakin

பத்திரிகையாளராக இருந்து, பிறகு இயக்குனர் மிஷ்கினிடம் 3 படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.வடிவேல் இயக்கியிருக்கும் இந்த ‘கள்ளப்படம்’ நல்ல படமா?

கதைக்களம்

சினிமாவில் இயக்குனராக, ஒளிப்பதிவாளராக, இசை அமைப்பாளராக, படத்தொகுப்பாளராக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னையில் ஒரே அறையில் தங்கி வாய்ப்பு தேடும் நான்கு நண்பர்கள் வடிவேல், ஸ்ரீராம் சந்தோஷ், கே, காகின்! முதல் பட வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்தில் நான்கு பேரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவது என்பது இவர்களது முடிவு! 3 வருடங்களாக வாய்ப்பு தேடியும் இவர்களை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வராத நிலையில் வெறுத்துபோன நால்வரும் ஒரு அதிரடி முடிவை எடுக்கிறார்கள்...! அது என்ன என்பதே இந்த ‘கள்ளப்படம்’.

படம் பற்றிய அலசல்

சினிமா வாய்ப்பு தேடி அலையும் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மாறுபட்ட ஒரு கோணத்தில் படமாக்க முயன்றிருக்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் வடிவேல்! அதற்காக அவர் ஒரு புதுமை முயற்சியையும் கையாண்டுள்ளார்! அதாவது, இப்படத்தில் இயக்குனர் வாய்ப்பு தேடும் கேரக்டரில் தானே நடித்திருப்பதோடு, இப்படத்தில் இசை அமைப்பாளர் வாய்ப்பு தேடும் கேரக்டரில் இப்படத்தின் இசை அமைப்பாளர் ‘கே’யையும், ஒளிப்பதிவாளர் வாய்ப்பு தேடும் கேரக்டரில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷையும், படத்தொகுப்பாளர் வாய்ப்பு தேடும் கேரக்டரில் இப்படத்தின் எடிட்டிட்டரான காக்கினையும் நடிக்க வைத்திருப்பது தான்! இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்டலாம்! ஆனால் இயக்குனர் வடிவேல் கதையோடு ஒன்றி பயணித்திருக்கிறாரே தவிர ஒரு சாதாரண ரசிகன் எதிர்பார்க்கும் பொழுதுபோக்கு அம்சங்களை தர தவறிவிட்டார்! இதனால் படம் மிகவும் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தருகிறது. ஸ்ரீராம் சந்தோஷின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்! படத்தின் பின்னணி இசையில் கவனம் செலுத்திய கே, பாடல்களில் அதிக கவனம் செலுத்தவில்லை! காக்கின் எடிட்டிங் பணியும் குறிப்பிடும்படி அமையவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

இதுபோன்ற கதைகளில் ஒவ்வொரு கேரக்டரும் வலிமையான கேரக்டர்களாக இருப்பது அவசியம்! அந்த அவசியத்தை உணர்ந்து அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்! திரைப்பட தயாரிப்பாளராக வரும் நரேன், அவரது மனைவியாக வரும் லக்‌ஷ்மி ப்ரியா, அவரது காதலானக வரும் ஜிஷ்ணு, நண்பர்களுக்கு உதவுபவராக வரும் சிங்கம் புலி, போலீஸ் அதிகாரியாக வரும் கவிதா பாரதி ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம்! நரேனின் மனைவியாக வரும் லக்‌ஷ்மி ப்ரியாவின் நடிப்பும், வசன உச்சரிப்பும் குறிப்பிடத்தக்கது!

பலம்

1. எடுத்துக் கொண்ட புதிய கதைக்களம் 2. படத்தின் உருவாக்கத்தில் முக்கியமாக பங்காற்றியவர்களே படத்தில் நடித்திருப்பது

பலவீனம்

1. ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை 2. கவரும்படியான காமெடி, பாடல்கள் போன்ற பொழுதுபோக்கு விஷயங்கள் இல்லாதது 3. ஒளிப்பதிவு, சில இடங்களில் கோட்டை விட்டிருக்கும் எடிட்டிங்.

மொத்தத்தில்...

வெகுஜன சினிமாக்களை தவிர்த்து, இயல்பான கதை சொல்லுதல் பாணி படங்கள் விரும்புவோருக்கு மட்டும் இந்த ‘கள்ளப்படம்’ நல்ல படமாக அமைய வாய்ப்பிருக்கிறது!

ஒருவரி பஞ்ச்: வித்தியாச விரும்பிகளுக்கு மட்டும்!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டிரைலர்


;