நாயைத் தொடர்ந்து பேய்! - சிபிராஜின் அடுத்த அதிரடி

நாயைத் தொடர்ந்து பேய்! - சிபிராஜின் அடுத்த அதிரடி

செய்திகள் 20-Mar-2015 3:34 PM IST Chandru கருத்துக்கள்

‘நாய்கள் ஜாக்கிரதை’ தந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்பதால், தான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்காக மிகவும் ஜாக்கிரதையாக கதைகளைத் தேர்வு செய்து கொண்டிருந்தார் சிபிராஜ். இப்போது தனக்கான அடுத்த வெற்றிப்பட கதையை அவர் தேர்வு செய்துவிட்டார். ‘பர்மா’ பட இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் ‘ஜாக்ஸன் துரை’ என்ற பேய்ப் படத்தில் நாயகனாக நடிக்க சிபிராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படத்தில் சிபிராஜுடன் அவரது அப்பா சத்யராஜும், காமெடிக்காக கருணாகரனும் நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எம்.எஸ்.சரவணன் இப்படத்தை தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே மாசாணி, சலீம் படங்களைத் தயாரித்ததோடு, வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, கயல், காக்கி சட்டை போன்ற படங்களை சென்னை & செங்கல்பட்டு ஏரியாக்களில் விநியோகம் செய்தவர் ஆவார்.

100 வருடமாக ஒரு பேயிடம் சிக்கி தவிக்கும் கிராமம் ஒன்றைக் காப்பாற்ற செல்லும் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே இந்த ‘ஜாக்சன் துரை’யின் கதைக்களமாம். இப்படம் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது எனவும் தயாரிப்புத்தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;