ஆப்பிரிக்க நாடுகளில் ரிலீஸாகும் ‘நான் ஈ’

ஆப்பிரிக்க நாடுகளில் ரிலீஸாகும் ‘நான் ஈ’

செய்திகள் 20-Mar-2015 3:21 PM IST Chandru கருத்துக்கள்

வெற்றிப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் சமந்தா, சுதீப் ஆகியோர் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படம் ‘ஈகா’. ஒரு சாதாரண ஈயை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் தமிழில் ‘நான் ஈ’, என்ற பெயரில் வெளியானது. அதேபோல் ஹிந்தியில் ‘மக்கி’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸானது. இந்திய மொழிகளில் சூப்பர்ஹிட் அடித்த இப்படம் இப்போது ‘ஸ்வாஹிலி’ (SWAHILI) எனும் மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகவிருக்கிறது.

தெலுங்கு படங்களைப் பொறுத்தவரை ‘ஸ்வாஹிலி’ மொழியில் டப் செய்யப்படும் முதல் படம் ‘ஈகா’தான். கிழக்கு ஆப்பிரிக்கா, தான்ஸானியா, கென்யா, உகாண்டா, வாண்டா, புருன்டி, காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளில் வெளியாகும் இப்படத்திற்கு ‘இன்ஸி’ (INZI) என டைட்டில் வைத்திருக்கிறார்கள். அதன் கீழே ‘கிஸாஸி சா விஷோ’ (Kisasi Cha Mwisho) என டேக் லைனும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ‘ஈயின் உச்சகட்ட பழிவாங்கல்’ என அர்த்தமாம். தான்ஸானியாவைச் சேர்ந்த ஸ்டெப்ஸ் என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் ‘ஈகா’வின் ‘ஸ்வாஹிலி’ மொழிப் படத்தை ஆப்பிரிக்க நாடுகளில் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;