கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரான்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரான்!

செய்திகள் 20-Mar-2015 1:26 PM IST Chandru கருத்துக்கள்

இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பரப்பரப்பான இசை வேலைகளின் இடையே, தனது நண்பன் ரத்திந்திரன் ஆர் பிரசாத் இயக்கியுள்ள குறும்படத்தை படத்தை நிர்வாக தயாரிப்பு செய்துள்ளார். ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்’ என்ற இக்குறும்படம் பிரான்ஸ் நாட்டில் நடக்கும் 2015ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது. முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்பட்டுள்ள ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்’ குறும்படத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் பசாக் கேசிலர் பிரசாத் மற்றும் ஹக்கன் கண்டார்லி சார்பாக இசையமைப்பாளர் ஜிப்ரான் பொறுப்பேற்று தயாரித்துள்ளனர். இந்த குறும்படத்தைப் பற்றி ஜிப்ரான் குறிப்பிடும்போது,

“ ரத்திந்திரன் எனது சிறு வயது நண்பர். நல்ல சினிமா பற்றிய விஷயங்களை ஆராய்வதுண்டு. பல சர்வதேச திறைபடங்களில் பணியாற்றியுள்ளார். சினிமாவில் சாதிக்கவேண்டும் என்று துடிப்புடன் இருப்பவர். இருவரும் பல வருடங்களுக்கு முன் குறும்படம் ஒன்றை தயாரித்த்துள்ளோம். அதுவும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. நீண்ட நாள் பிறகு தயாரிப்பு வேலைகளில் இறங்கியது நல்ல அனுபவமாய் இருந்தது. ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்’ குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் மற்று எனது நண்பன் ரத்திந்திரனுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

ஜிப்ரான் மற்றும் ரத்திந்திரன் ஆர் பிரசாத் இருவரும் பிரான்சில் மே 13 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்’ திரையிடலுக்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;