‘விஐபி’ டீமின் புதுப்படம் தொடங்கியது!

‘விஐபி’ டீமின் புதுப்படம் தொடங்கியது!

செய்திகள் 20-Mar-2015 11:27 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில மாதங்களாக ‘மாரி’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் தனுஷ். இப்படத்திற்காக முறுக்கு மீசை, குறுந்தாடி என வித்தியாசமான லோக்கல் தாதா கெட்அப்பில் இருந்த தனுஷ் தற்போது மீசை, தாடியை எடுத்துவிட்டு ஸ்கூல் பையன்போல் காட்சியளிக்கிறார். ‘மாரி’யின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டதால், வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் கூட்டணியிலேயே இப்படம் உருவாகிறதென்றாலும், இது இப்படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்பதையும் தனுஷ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஐபி 2 - புதிய டீஸர்


;