சூர்யாவின் ராஜதந்திரம்... ‘பின்னணி’யில் கௌதம் கார்த்திக்!

சூர்யாவின் ராஜதந்திரம்... ‘பின்னணி’யில் கௌதம் கார்த்திக்!

செய்திகள் 20-Mar-2015 10:56 AM IST Chandru கருத்துக்கள்

நேற்று ஒரே இடத்தில் நடிகர்கள் சூர்யாவும், கௌதம் கார்த்திக்கும் தத்தமது வேலைகளுக்காக வந்து போயிருக்கிறார்கள். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள ஃபோர் ஃபிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரின் முதல் மாடியில் சூர்யாவுக்காக ‘ராஜதந்திரம்’ படத்தின் பிரத்யேக காட்சி போட்டுக் காண்பிக்கப்பட்டது. முழுப்படத்தையும் ஆர்வமுடன் உட்கார்ந்து ரசித்த சூர்யா படம் முடிந்து வெளியே வந்ததும் படத்தின் இயக்குனர் அமித், ஹீரோ வீரா, ஹீரோயின் ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோரை மனதாரப் பாராட்டிவிட்டுச் சென்றார்.

அதேநேரம் ஃபேர் ஃபிரேம்ஸின் கீழ்தளத்தில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் ‘வை ராஜா வை’ படத்திற்காக பின்னணி குரல் கொடுக்க கௌதம் கார்த்திக்கும் வந்திருந்தார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;