2 இடங்களில் ‘ருத்ரமாதேவி’யின் இசை வெளியீட்டு விழா‘!

2 இடங்களில் ‘ருத்ரமாதேவி’யின் இசை வெளியீட்டு விழா‘!

செய்திகள் 20-Mar-2015 10:21 AM IST Top 10 கருத்துக்கள்

‘இந்தியாவின் முதல் 3டி வரலாற்றுப் படம்’ என்ற பெருமையோடு உருவாகி வரும் ‘ருத்ரமாதேவி’, ஏப்ரல் ரிலீஸுக்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறது. காகத்தியா ராஜ்ஜியத்தின் ராணி ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தில் ராணா, அல்லு அர்ஜுன், பிரகாஷ் ராஜ், சுமன், கேத்ரின் தெரஸா, ஹம்சா நந்தினி, நித்யா மேனன், பிரம்மானந்தம் என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.

‘இசைஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘ருத்ரமாதேவி’யின் 6 பாடல்களை இரண்டு கட்டமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். வரும் 21ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் 3 பாடல்களையும், 22ஆம் தேதி வாராங்கலில் 3 பாடல்களையும் வெளியிடவிருக்கிறார்களாம். இந்த இரண்டு விழாக்களிலும் அனுஷ்கா கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;