‘தல’ அஜித்துக்காக அனிருத்தின் ஸ்பெஷல் தீம் மியூசிக்!

‘தல’ அஜித்துக்காக அனிருத்தின் ஸ்பெஷல் தீம் மியூசிக்!

செய்திகள் 20-Mar-2015 10:04 AM IST Chandru கருத்துக்கள்

‘வீரம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவாவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதல்முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களோடு சந்தானம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் முதல்முறையாக ‘தல’யுடன் அனிருத் இணைகிறார் என கடந்த சில வாரங்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. தற்போது இசையமைப்பாளர் அனிருத்தே அந்த செய்தியை ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், ‘‘அஜித் சாரின் ‘தல 56’ படத்திற்கு இசையமைக்கவிருப்பதை நினைக்கையில் சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளது!’’ என குறிப்பிட்டுள்ளார்.

‘கத்தி’யில் விஜய்க்காக சூப்பர் தீம் மியூசிக் உருவாக்கியதைப்போல, இந்த ‘தல 56’ஸிலும் அஜித்திற்காக ஸ்பெஷல் தீம் மியூசிக் ஒன்றை உருவாக்கவிருக்கிறாராம் அனிருத். ‘பில்லா’, ‘மங்காத்தா’ தீம் மியூசிக்கைப்போல் இதுவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;