பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ராய் லக்ஷ்மி?

பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ராய் லக்ஷ்மி?

செய்திகள் 20-Mar-2015 9:57 AM IST Chandru கருத்துக்கள்

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்’ படம் தமிழில் ரீமேக்காகவிருக்கிறது. இப்படத்தில் மலையாளத்தில் துல்கர் சல்மான், ஃபஹத் ஃபாசில், நிவின் பாலி, நஸ்ரியா ஆகியோர் நடித்த வேடங்களில் தமிழில் முறையே ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். மலையாளப்படம் பெங்களூரை மையமாக வைத்து எடுக்கப்பட்டதைப்போல் தமிழில் சிங்கப்பூரை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்களாம். இதனால் இப்படத்திற்கு ‘சிங்கப்பூர் நாட்கள்’ என்ற பெயர் வைக்கப்படலாம் என்றொரு பேச்சும் நிலவுகிறது.

மலையாளத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக இஷா தல்வார் நடித்திருந்தார். தமிழில் இந்த கேரக்டரில் நடிக்க ராய் லக்ஷ்மியை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இதனால் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ராய் லக்ஷ்மி நடிக்கலாம் என படக்குழுவுக்கு நெங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;